அஸ்லம் எஸ்.மௌலானா
Posted By Admin | Posted On 2019-08-02 09:21:55 | Views 894

(அஸ்லம் எஸ்.மெளலானா)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் A/L Day விழா இன்று வியாழக்கிழமை (01-08-2019) சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

கல்லூரி அதிபர் யூ.எல்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.ஜாபிர் அவர்கள் கௌரவ அதிதியாக பங்கேற்றத்துடன் பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மாணவிகளின் கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் கல்வி மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளில் திறமை காட்டிய மாணவிகள் பலர் இதன்போது அதிதிகளினால் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விழாவை முன்னிட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. 

மேலும், மாநகர முதல்வர் றகீப் அவர்கள், இதன்போது கல்லூரி சமூகத்தினால் நினைவு விருது வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

Like Us in Facebook
செய்தியாளர் தேவை
ஹஜ் பெருநாள் தொழுகை

Related Posts