உள்நாடு | கல்வி | 2019-08-01 18:26:15

அம்பாறையில் வேலையற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு

வேலையற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு  அம்பாறையில்  ஹாடி உயர் தொழிநுட்ப கல்லூரியில் நடைபெற்றது.


ஒரு வருட பயிற்சியினை பெற  இவ்வேலையற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள்  மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் நாடு தழுவிய ரீதியில் வேலையற்ற பட்டதாரி பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்ட உள்வாரி  வெளிவாரி பட்டதாரிகள் 16800 பேர்களின் நியமனக்கடிதங்கள் அலரிமாளிகை மற்றும் மாவட்டச் செயலகங்கள் ரீதியாக நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


அதன் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 631 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (1) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.


மாவட்டச் செயலாளர்  டி.எம்.எல்.பண்டாரநாயகா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம  அதிதியாக பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே விஷேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள்களான எம்.ஜ.எம்.மன்சூர்  கலாநிதி  எஸ்.எம்.இஸ்மாயில் மற்றும் அம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் பட்டதாரிகள் என பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில்  பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதத்தை பிரதம அதிதி வழங்கி வைத்தார். இதில் மும் மொழி மூல பட்டதாரிகளும் நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இதன் மூலம் மாவட்டச் செயலகம் பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய  அலுவலகங்களுக்கு இரண்டாம் திகதி முதல் தங்களது கடமையை பொறுப்போற்கும் வகையில் இணைப்புச் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts