உள்நாடு | கல்வி | 2019-07-23 23:08:12

நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் பால் போசனை திட்டம்

(பாறுக் ஷிஹான், எமது நிருபர்)

ஜனாதிபதியால் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட  பால் போசனை திட்டம் கிழக்கு மாகாணத்தில் முதன்முதலாக  அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கோட்டத்திற்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜலால் டீ சில்வா பிரதம அதிதியாக  கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

  நிகழ்வுகள்  கிழக்கு மாகாண  கல்விப்      பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் செவ்வாய்க்கிழமை(23)  காலை  இடம்பெற்றது.

மாணவர்களின் போதனை குறித்து கல்வி அமைச்சுக்கு பொறுப்பு இருக்கிறது ஆரோக்கியமான மாணவர்களே சிறப்பான ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனம் கலந்த பால்மா வகைகள் அண்மைக்காலமாக நாம் பல்வேறு இன்னல்கள் எதிர்கொண்டுள்ளோம் ரசாயன மோகத்தில் இருந்து நாம் விடுபட்டு எமது வளங்களை உபயோகிக்க பழக்படுத்தும்  அடிப்படை திட்டமே இது.

கிராமப்புறங்களில் இருந்து தூய பசும்பாலே பெற்று பலம் மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி நோக்கமாகும்.

கிழக்கு கல்வி அமைச்சின் செயலாளர் .கே.சி. முத்து பண்டா , கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் ,கல்வி அமைச்சின் நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் சுதர்சன , வலயக் கல்வி பணிப்பாளர்கள், கல்வி அமைச்சின் செயலாளர்கள், நாவிதன்வெளி பிரதேச செயலாளர்  எஸ். ரங்கநாதன் , சம்மாந்துறை வலய பாடசாலை அதிபர்கள் ,பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts