ஏ.எல்.எம்.ஷினாஸ்
Posted By Admin | Posted On 2019-06-24 20:41:03 | Views 865

-ஏ.எல்.எம்.ஷினாஸ்-

மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி பிர்தௌஸ் சத்தார் எழுதிய 'கிழக்கிலங்கை தமிழ் நாவல்கள்' ஆய்வுநூல் வெளியீட்டு விழா  நேற்று மாலை (23.06.2019) மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் பேராசிரியர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தலைமையில் நடைபெற்றது.

மர்ஹூம் அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா (கவிஞர்அறநிலா) நினைவரங்கில் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நூலினை வெளியீட்டு வைத்தார். நூலின் முதல் பிரதியை மருதமுனையை சேர்ந்த கலீல் எம்.முஸ்தபா பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர்களான எஸ்.யோகராசா, றமீஸ் அப்துல்லா, கலாநிதி கனீபா இஸ்மாயில் ஆய்வாளர் அப்துல் றஸாக் ஆகியோர் நூல் மீதான உரைகளை நிகழ்த்தினார்கள் 

கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் அம்மன்கிளி  முருகதாஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம்.மஸாஹிர் எழுத்தாளர் உமாவரதராஜன், கவிஞர்களான சோலைக்கிளி மற்றும் மருதமுனை ஹஸன் உட்பட தமிழ்- முஸ்லிம் எழுத்தாளர்கள் இலக்கிய ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் இந்தநிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வுகளை கவிஞர் விஜிலி தொகுத்து வழங்கினார்

 

Like Us in Facebook
செய்தியாளர் தேவை
ஹஜ் பெருநாள் தொழுகை

Related Posts