பி.எம்.எம்.ஏ.காதர்
Posted By Admin | Posted On 23/06/2019, 09:44:13 | Views 679

(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி பிர்தௌஸ் சத்தார் எழுதிய “கிழக்கிலங்கை தமிழ் நாவல்கள்”ஆய்வுநூல்; அரங்கேற்றம் அதிபர் மர்ஹூம் ஏ.ஆர்.நிஃமத்துல்லா (கவிஞர்அறநிலா) நினைவரங்கில்   இன்று ஞாயிற்றுக்கிழமை (2019-06-23ஆம் திகதி மாலை3.30 மணிக்கு மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் பேராசிரியர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தலைமையில் நடைபெறவுள்ளது.

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் கலந்து கொள்கின்றார்.முதன்மை அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ்,தென்கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம்.மஸாஹிர் ஆகியோரும்,கௌரவ அதிதிகளாக எழுத்தாளர் உமாவரதராஜன்,கவிஞர்களான சோலைக்கிளி,மருதமுனை ஹஸன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

நூல் மீதான உரைகளை பேராசிரியர் செ.யோகராசா,பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,கலாநிதி கனீபா இஸ்மாயில் ஆய்வாளர் அப்துல் றஸாக் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.நிகழ்ச்சிகளை கவிஞர் விஜிலி தொகுத்து வழங்கவுள்ளார்.

Like Us in Facebook
செய்தியாளர் தேவை
ஹஜ் பெருநாள் தொழுகை

Related Posts