எமது நிருபர்
Posted By Admin | Posted On 2019-06-22 23:53:14 | Views 672

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 11 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றிகொண்டது.

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 28-வது லீக் ஆட்டம்  சவுத்தாம்டனில் இன்று பகல் 3 மணிக்குத் தொடங்கியது. இந்நிலையில் நாணயசுலட்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இந்நிலையில் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும்  ரோகித் சர்மாவும் களமிறங்கினர்.

ரோகித் சர்மா ஒரு ஓட்டத்துடன் வெளியேறி அதிர்ச்சி அளித்த நிலையில். ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். இதனால் இந்திய அணியின் ஓட்ட வேகம் குறைந்தே காணப்பட்டது. 

ஆனாலும் விராட் கோலி, கேதார் ஜாதவ் ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர். இதன்போது கோலி 67 ஓட்டத்துடனும், கேதார் ஜாதவ் 52 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் நயீப், ரஷித் கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 225 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஹஸ்மதுல்லா சசாயும், அணித் தலைவர் குல்பதின் நயிபும் துடுப்பெடுத்தாடினர். இந்நிலையில் நயிப் 27 ஓட்டத்துடனும், ரஹ்மத் ஷா 34 ஓட்டத்துடனும் ஹஸ்மதுல்லா ஷஹிதி 21 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய மொகமது நபி ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். இறுதி ஓவரில் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ஓட்டங்களை மாத்திரம் பெற்று டீதோள்வியுள்ளது. இந்தியா 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இறுதி ஓவரில் ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்

இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்டும், பும்ரா, சாஹல், பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

Like Us in Facebook
செய்தியாளர் தேவை
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்
ஹஜ் பெருநாள் தொழுகை

Related Posts