கல்வி | கல்வி | 2019-05-23 23:24:02

தந்தையை இழந்த 2000 மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கிய கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்.

(ஊடகப்பிரிவு) 
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த தந்தையை இழந்த 2000 மாணவர்களின் கல்விக்காக 120 இலட்சத்தினை தனது ஆளுநர் வாசஸ்தள பாராமரிப்பு நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு (3கொல்லப்பட்டது லை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா தலைமையில் திருகோணமலை விவேகானந்தா தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது.
ஆரம்ப வைபவம் திருகோணமலை கல்வி வலயத்திற்குற்பட்ட 84 தந்தையை இழந்த மாணவர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நான்கு மாதங்களுக்கான கொடுப்பணவு சேமிக்கப்பட்ட வங்கிப்புத்தகத்தினை  மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் வாசஸ்தளத்திற்கு வருடமொன்றுக்கு ஒதுக்கப்படுகின்ற 200 இலட்சம் ரூபாய் நிதியிலிருந்து 120 இலட்சம் ரூபா இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாகாணத்தில் உள்ள 18 கல்வி வலயங்களின் கல்விப்பணிப்பாளர்களுக்கு தொடர்ந்தும் இத்திட்டத்தினை முன்னெடுக்கவும் உத்தரவு வழங்கினார்.
இத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்ட ஆளுநர் அடுத்த வருடம் வரவு செலவு திட்டத்தினூடாக இதைவிட மேலதிக நிதியினை தந்தையினை இழந்த மாணவர்களுக்கு வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தனது உரையில் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
நிகழ்வில் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், மதகுருமார்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாவலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts