பிராந்தியம் | அரசியல் | 2019-05-22 07:33:21

றிஷாட் பதியுத்தீன் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது- பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவிப்பு.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பான வெறும் அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் என அந்தக் கட்சியின்  தேசிய அமைப்பாளரும், கப்பல் துறை, துறைமுகங்கள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஒலுவில் துறைமுக வாடி வீட்டு விடுதியில் (20)  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர்,  முஸ்லிம் சமூகத்தின் குரலை அடிமையாக மாற்றுவதற்கே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளனர். எதிர் கூட்டணியினருக்கு றிஷாட் பதியுத்தீன் கடந்த காலங்களில் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கவில்லை என்ற காழ்ப்புணர்வை வைத்துக் கொண்டு அமைச்சருக்கு சேறு பூசும் நோக்கில்; இந்தச் செயற்பாட்டில் இறங்கியிருக்கிறார்கள். இவர்களின் நோக்கம் ஐக்கிய தேசிய முன்னணியின் இந்த ஆட்சியை கவழ்பதாகும். ஆனால் இது இவர்களுக்கு பலிக்காது. 

இமைச்சர் ரவி கருணாணயக்க, ராஜித்த சேனாரட்ன ஆகியருக்கும் இது போன்ற நம்பிக்கையில்லாப் பிரரேணைகனை கொண்டுவந்தார்கள் இறுதியில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். முகமூடி அணிந்து கொண்டுவந்த சிலரால் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சகோதரர் ஒருவர் கடத்தப்படும் போது அல்லது கைது செய்ப்படும் போது இராணுவத் தலைவரிடம் உண்மையை அறிவதற்கு பேசியதை வைத்துக் கொண்டு இராணுவத்தளபதியை மிரட்டினார் என்று உண்மையை மூடிமறைத்து அபாண்டமான கருத்துக்களை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உண்மை எது என்பதை ஊடகங்கள் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு தேவையான குரல் பதிவு ஆவணம் தற்போது அமைச்சரிடம் உண்டு.


கடந்த ஆட்சியாளர்களின் காலத்தில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள், கடத்தப்பட்டார்கள், சுதந்திரமாக செயற்பட முடியாமல் இருந்தது ஆனால் தற்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஊடகவியலாளர்களை பாதுகாத்துள்ளது. தகவலறியும் சட்டத்தை கொண்டுவந்து முழு சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது. ஊடகங்கள் தமக்கு சுதந்திரம் உள்ளது என்று நினைத்து சில தனியார் ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுகின்றன. இவர்கள் இதன் மூலம் மக்களுக்கு சொல்லும் செய்திதான் என்ன? என்றும் கேள்வியெழுப்பினார்.

இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில்; நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் ஆகியோரும் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவித்தனர். 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts