பிராந்தியம் | அரசியல் | 2019-05-22 07:09:23

ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் முஸ்லிம் மக்களுக்குரிய பாதுகாப்பை வழங்க தவறியுள்ளது- சட்டத்தரணி ஹாதி

முஸ்லிம் மக்களின் பொருளாதாரம், உடமைகள் பள்ளிவாசல்கள், கல்வி நடவடிக்ககைள் என்பன சிலரால் நன்கு திட்டமிடப்பட்டு சூறையாடப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகிறது என சட்டத்தரணி எம்.ஐ.றைசுல் ஹாதி தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார் இங்கு மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

சந்திரிக்கா அம்மையாரின் ஒரு கட்சி அரசாங்கத்தில் மாவனல்லையிலும், மகிந்த ராஜபக்ஸவின் ஒரு கட்சி அரசாங்கத்தில் அளுத்கமையிலும், மைத்திரி ரனில் நல்லாட்சி அரசாங்கத்தில் ஜின்தோட்ட, திகன மற்றும் அம்பாரையிலும்,

தற்போதைய ஜனநாயக அரசாங்கத்தில் குருணாகலிலும்,புத்தளம் வரையிலும் தொடர்கிறது. இந்நிலமைகளில் இருந்த அரசாங்கங்கள் முஸ்லிம் மக்களுக்குரிய பாதுகாப்பை வழங்க தவறியுள்ளது.

எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லீம்கள் வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு செயற்படுவதுடன் சலுகை அரசியலை கைவிட்டு மக்களின் இருப்பை உறுதி செய்ய முன் வரவேண்டும்.எனவும் தெரிவித்துள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts