கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-04-08 23:13:28

ஹரீஸாவின் படைப்புக்கள் சமூக உணர்வுகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. - செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார்

ஏ. எல்.எம்.ஷினாஸ்)  

ஹரீஸாவின் எழுத்துக்கள் சமூக உணர்வுகளை தூண்டச் செய்கிறது.. என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் தெரிவித்தார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம்  பி.எம்.எம்.ஏ.காதரின் சிரேஷ்ட புதல்வி மருதமுனை  ஹரீஸா சமீம் (நூலகர்) எழுதிய “சொட்டும் மிச்சம் வைக்காமல்" நூல் வெளியீட்டு நிகழ்வு  (07) மாலை 3.00 மணியளவில் மருதமுனை மருதூர்க்கனி ஞாபகார்த்த பொது நூலக கேட்போர் கூட்ட மண்டபத்தில் மருதூர் வாணர் நினைவரங்கில் நடைபெற்றது.

தென்கிழக்கு அஷ்ரஃப் சமூக சேவைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில்  பிறை எப்.எம் நிலையக் கட்டுப்பாட்டாளர் பஸீர் அப்துல் கையூம் தலைமையில்நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதோ இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,

பெண் எழுத்தாளர்கள் அவர்கள் சார்ந்த பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக சமூகத்திற்கு முன் வைக்கிறார்கள்.ஹரீஸா மனதை தொடும் வண்ணம் தனது கவிதைகளை படைத்துள்ளார். இன்று நிருவாக சேவைகளிலும் பெண்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.

நூலாசிரியர் ஒரு நூலகராக இருப்பதால் அவர் இன்னும் காத்திரமான படைப்புக்களை தரவேண்டும். இவருடைய தந்தை ஒரு ஊடகவியலாளர். கவிதாயினி மிகவும் பின்தங்கிய குடும்ப சூழலில் இருந்து வந்தவர். இவர்களது குடும்ப சூழல், பின்னனியை நான் நன்கு அறிவேன். ஹரீஷாவின் ஆழுமை பெறுமதியான இடத்தை எதிர்காலத்தில் தரும் என்ற நம்பிக்கை தெரிகிறது என்றார்.

நூலின் முதல் பிரதியை பதில் நீதிபதி ஏ.எம்.பதுறுத்தீனின் பிரதிநிதியாக கலந்து கொண்ட சட்டத்தரணி றாஸிம் ஹமீட் பெற்றுக் கொண்டார்.

இதில் கெளரவ அதிதிகளாக பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, பேராசிரியர் செ.யோகராசா ஆகியோரும் விசேட அதிதியாக எழுத்தாளர்  உமா வரதராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் “சொட்டும் மிச்சம் வைக்காமல்" நூல் நயத்தை ஆசிரியரும், ஊடகவியலாளருமான ஜெஸ்மி மூஸா நிகழ்த்தினார். 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts