கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-04-05 22:40:17

மருதமுனைனையைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா காலமானார்.

(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனைனையைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா(வயது 56)இன்று(05-04-2019) வெள்ளிக்கிழமை காலமானார். சில மாதங்களாக சுகவீமற்றிருந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் உயிரிளந்துள்ளார்.

இவர் 1962.11.26ஆம் திகதி மருதமுனையில் பிறந்தவர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி,அல்மனார் மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழையமாணவரான இவர் பேராதனைப் பல்கலைக்கழக பல்கலைக் கழக கலைப் பட்டதாரியுமவார்.

இவர் 1984ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்று குறுத்தலாவ முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கடமையேற்றார்.அதன் பின்னர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி,அல்மனார் மத்திய கல்லூரி,அல்-ஹம்றா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கடமையாற்றினார்.

சுனாமி அனர்த்தத்தின் பின்னர் மருதமுனையில் புதிதாக 2009.01.12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அல்-மதீனா வித்தியாலயத்தின் அதிபராக பொறுப்பெற்று கடந்த பத்து வருடங்களாக இப்பாடசாலையை முன்னேற்றுவதிலே அதிக அக்கறையோடு செயற்பட்டவர்.இப்பாடசாலையின் பௌதீக வளங்களையும்,கல்வி மேம்பாட்டையும் அக்கறையோடு உயர்வடையைச் செய்தவர்.

கோலங்கள் கோணங்கள்,வட்டத்துள் சில புள்ளிகள் ஆகிய இரண்டு கவிதை நூல்களையும்,க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான இரண்டு தமிழ் இலக்கிய நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.எல்லோரோடும் மிகவும் அன்பாகவும்,பண்பாகவும் பழகும் இவர் மாணவர்கனின் கல்விக்கு வழிகாட்டுவதில் சிறந்த ஆற்றலைக் கொண்டவர்.மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதிலும் சிறப்புமிக்கவர்.

இவர் மருதமுனையைச் சேர்ந்த மர்ஹ_ம் மௌலவி அப்துல் றசூல்,ஆயிஷா தம்பதியின் புதல்வராவார்.இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று(05-04-2019) மாலை 5.30 மணிக்கு மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் பெரும் அளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts