விளையாட்டு | விளையாட்டு | 2019-04-01 10:46:33

 கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி வெற்றிக்கிண்ணம்  மட்டக்களப்பு லீக் அணியினர் வசம்.

கிழக்குமாகாண கட்டளைத் தளபதி வெற்றிக்கிண்ணத்திற்கான இறுதிப் போட்டி  (31-03-2019) வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.

இவ் இறுதிப் போட்டிக்கு முதலாவது அறையிறுதி ஆட்டத்தில் அம்பாறை உதைப்பந்தாட்ட லீக்கை பிரதிநிதுத்துவப்படுத்திய கல்முனை சனிமௌன்ட் அணியினர் கல்குடா லீக்கை பிரதிநிதித்துவப்படுத்திய கல்குடா அணியை 11:0 என்ற அபார கோல் சாதனையுடன்  தெரிவானது.

 இரண்டாவது அறையிறுதிப் போட்டியில் கிண்ணியா லீக் அணியினரை 03:01 கோல் அடிப்படையில் வீழ்த்தி மட்டக்களப்பு லீக் அணியினர் இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்ப்பட்டிருந்தனர். இதில் Yssc அணி சார்பாக மட்டக்களப்பு லீக் அணியை பிரதிநிதிதுவப்படுத்தி 8 வீரர்கள் விளையாடியிருந்ததுடன் Yssc கழக சிரேஷ்ட வீரர் MM.தஸ்லிம் மட்டக்களப்பு லீக் அணியை தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை லீக்கை பிரதிநிதுப்படுத்திய சனிமௌனட் அணியினர் பொறுத்தவரை இன்று அம்பாறை உதைப்பந்தாட்ட லீக்கில் பலம்பொருத்திய அணியினராக திகழ்த்து கொண்டிருக்கின்றனர் இவ் அணியை கியாஸ் வழிநடத்திருந்தார்..

மிக மிக விறுவிறுப்பாக நடைபெற்றிருந்த இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு லீக் அணியினரின் அபார ஆட்டத்தின் காரணமாக 06:00 எனும் கோல் அடிப்படையில் வெற்றி பெற்று கிழக்குமாகாண கட்டளைத்தளபதி வெற்றிக்கிண்ணத்தை மட்டக்களப்பு லீக் அணி  தம்வசப்படுத்தியதுடன் 75000/- பணப்பரிசினையும் பெற்றுக்கொண்டனர்.

மட்டக்களப்பு லீக் அணி சார்பாக 
Anas Mersal Anaa 01 கோலினையும் Darolis Barthelot 03 கோல்களையும் Mohammed Musthak 02 கோல்களையும் பெற்றுக் கொடுத்தனர். அத்துடன் இச்சுற்றுப்போட்டியின் சிறந்த வீரராக மட்டக்களப்பு லீக் அணி வீரர் டார்லியஸும் சிறந்த கோல் காப்பாளராக மட்டக்களப்பு லீக் அணி கோல் காப்பாளர் ரூபனும் தெரிவு செய்யப்பட்டனர்.

இறுதி நாள் நிகழ்வின் அதிதியாக இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் டயஸ் சேனநாயக்க கலந்து கொண்டு சிறப்பித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts