ஏ.எல்.எம்.ஷினாஸ்
Posted By Admin | Posted On 2019-03-21 16:05:27 | Views 635

(-ஏ.எல்.எம்.ஷினாஸ்-)

கல்முனை பிராந்தியத்தில் கால்பந்தாட்ட அகடமியினை உருவாக்க வேண்டும் என உள்ளருாட்சி மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் கால்பந்தாட்ட துறையில் திறமைகாட்டிய  வீரர்களை பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்வு என்பன (16)  மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி வளாகத்தில் ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எம். சிலாயத் நஜிமுடீன் தலைமையில் நடைபெற்றது.   இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்.

இப்பிராந்தியத்திலுள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களும் பயனடையும்வகையில்  கல்முனை பிரதேசத்தில் ஒரு கால்பந்தாட்ட அகடமியினை உருயவாக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் அவாக உள்ளது

இலங்கையில் வீடமைப்பு திட்டத்தை உருவாக்குவதற்காக இம்மாத இறுதியில் கட்டார் நாட்டு இளவரசர் ஒருவர் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வருவதாக அறிவித்துள்ளார், அவர்களை இப்பிராந்தியத்திற்கு அழைத்துவருவதற்கான முயற்சிகளை நான் முன்னெடுத்துள்ளேன்.  அத்தூதுக் குழுவுடன் பேசி இப்பிராந்தியத்தின் நிலையான கால்பந்தாட்ட துறையின் அபிவிருத்திக்கு வழிவகை செய்ய வேண்டுமென்ற ஆசையுடன் இருக்கின்றன்.

விளையாட்டு வீரர்கள் விளையாட்டுத்துறையில் மட்டுமல்லாது தங்களது கல்வித்துறைகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்றைய நிகழ்வில் பல்கலைக்கழக உயர்கல்விக்கு தெரிவுசெய்யப்பட்ட பல மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.இதனை வரவேற்கிறன் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் 1983 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மிகவும் பழைமைவாய்த ஒரு கழகமாகும் என்றார்.

கழகம் ஆரம்பிக்கப்பட்டு 36 வருடங்கள் பூர்தியடைந்துள்ள நிலையில் இந்த நிகழ்வில்  திறமையான வீரர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

Like Us in Facebook
நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Related Posts