விளையாட்டு | விளையாட்டு | 2019-03-20 13:13:21

மருதமுனை ஒலிம்பிக் - கோல்ட் மைன்ட்  பலப்பரீட்சை இன்று

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மருதமுனை கோல்ட் மைன்ட் கழகமும் ஒலிம்பிக்  விளையாட்டுக் கழகமும் ஒன்றை ஒன்று எதிர்த்து பலப்பரீட்சை நடாத்தும் இறுதிப் போட்டி இன்று (20) இரவு 9.00 மணிக்கு அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் கல்முனை மாநகர முதல்வருமான சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் நடைபெறவுள்ளது. 

 மருதமுனை எஸ்.பி.பவுண்டேசன் அனுசரணையுடன்  அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தி வருகின்ற  மர்ஹூம் டாக்டர் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.எஸ்.பி ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2019   உதைபந்தாட்ட   சுற்றுப் போட்டி மருதமுனை மசூர்மௌலான விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றுப் போட்டியில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 16 அணிகள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுப் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் கடந்த (16,17)சனி-ஞாயறு ஆகிய தினங்களில் மின்னொளி போட்டிகளாக இரவு 9.00 மணிக்கு நடைபெற்றன. முதலாவது அரையிறுதிப் போட்டியில் கல்முனை பிர்லியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மருதமுனை கோல்ட் மைன் விளையாட்டுக்கழகம் மோதியது இந்தப் போட்டியில் (02.01) என்ற கோல் வித்தியாசத்தில் கோல்ட் மைன் விளையாட்டுக்கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

இரண்டாவது அரையிறுதிப் பொட்டி (17) மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்திற்கும் கல்முனை சனிமவ்ண்ட்  விளையாட்டுக் கழகத்தினருக்கும் இடையில் நடைபெற்றது. மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இறுதி 10 நிமிடங்களுக்கு முன்னர் ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தினர் போட்ட கோலினால் (01.00) என்ற கோல் வித்தியாசத்தில் ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தினர் வெற்றி பெற்றனர்.

ஒலிம்பிக் மற்றும் கோல்ட் மைன் விளையாட்டுக் கழகங்கள் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடும் இறுதிப் போட்டி இன்று (20) புதன்கிழமை  நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக எஸ்.பி.பவுண்டேசன் செயற்பாட்டாளர் யூ.எஸ்.சபீல் தெரிவித்துள்ளார். இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக்(ஜவாத்) கலந்து கொள்ளவுள்ளார்.

மருதமுனை வரலாற்றில் என்றும் போற்றப்படும்  டாக்டர் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.எஸ்.பி அவர்கள் 2009.04.05 திகதி மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து இனம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கி ரவைபளுக்கு இலக்காகி அகால மரணமடைந்தார் இவரது ஞபமார்த்தமாகவே எஸ்.பி.பவுண்டேசன் ஸ்தாபிக்கப்பட்டு பல்வேறு பொதுச் சேவைகளை பொது மக்களுக்கு வழங்கி வரகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts