வெளிநாடு | அரசியல் | 2019-02-28 07:03:36

இந்தியா - பாகிஸ்தானுக்கு இலங்கை வேண்டுகோள்

பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடிய முறையிலும் செயற்படுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது

இந்திய புல்வாமா பகுதியில் மத்திய ரிசேர்வ் பொலிஸ் படை பாதுகாப்பு அணி , மீது நடாத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சமீபத்திய முரண்பாடுகள் தொடர்பில் இலங்கையானது ஆழ்ந்த கவலையடைகின்றது என்று இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையானது கிட்டத்தட்ட மூன்று தசாப்தகால கொடூரமான பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில் புல்வாமாவில் இடம்பெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலை தெளிவாக கண்டிப்பதுடன் பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் எல்லா தோற்றங்கள் மற்றும் வடிவங்களுக்கு எதிராக உறுதியுடன் நிற்கின்றது.

இலங்கையானது தென்-ஆசிய பிராந்தியத்தில் சமாதனம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்பவும், கலந்துரையாடல் மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பல் ஆகியவற்றின் ஊடாக இருதரப்பு பிரச்சினைகளை தீர்த்தல் உட்பட, பதற்றத்தை தணித்தல் தொடர்பில் அனைத்து முயற்சிகளுக்கும் வலுவான ஆதரவை தெரிவிக்கின்றது.

இந்த சூழ்நிலையில், ஒட்டு மொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடிய முறையிலும் செயற்படுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம இலங்கை வேண்டுகோள் விடுக்கின்றது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts