கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-02-13 16:37:15

ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் காலமானார்

பாறுக் ஷிஹான்  

ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் சிவத்தமிழ் வித்தகர் கலாபூசணம் சிவமகாலிங்கம்  யாழ். கோண்டாவில் பொற்பதி வீதியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இன்று புதன் கிழமை (13)அதிகாலை யாழ்.குப்பிழானைப் பிறப்பிடமாக கொண்ட சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் காலமாகும் போது அவருக்கு 70 வயது ஆகும்.

தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பணியாற்றிய இவர்  இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளராகவும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளராகவும் பணியாற்றியிருந்ததுடன், கந்தபுராணம் திருமந்திரம் போன்றவற்றுக்குப் பொழிப்புரைகளையும் எழுதியவர்.சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாதாந்தம் வெளியிடப்படும் நூலுக்கு மாதாந்தம் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தவர்.அதை விட பல ஆன்மீக புத்தகங்கள் எழுதியவரும் சிறந்த சொற்பொழிவாளரும், கல்வியியலாளரும் ஆவார்.திருமந்திரத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர் பல்வேறு ஆலயங்களிலும் சமய சொற்பொழிவுகளும் ஆற்றியுள்ளார். இவரது சமய சொற்பொழிவுகள் தனித்துவமானவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

மேலும் அன்னார் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கத்தின்  சகோதரனாவார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts