கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 1970-01-01 05:30:00

ஜூல்பிக்கா சரீப் எழுதிய ; கடற்கரைப்_பள்ளிவாசல்.......  கொடியேற்றம்.......

#கடற்கரைப்_பள்ளிவாசல்.......
          #கொடியேற்றம்.......
  05/02/2019 --- 17/02/2019.
***********************************
எல்லைகளைத் தாண்டிய....
வரலாறு....
எங்களது கல்முனைக்கு....!
இப்போது....
விழாக்கோலம்......!

ஈடிலா அதிசயங்கள்....
நிகழ்த்துகின்ற இடம்....
நாடிவருவோருக்கு....
நலம் காட்டும்....
பள்ளிவாசல்......
திசைகள் தோறும்....
இறை நேசர்களின்....
வாசங்களால்....
நிறைகிறது....
புனித பூமி......!

வானுயரப் பறவைகளாகி....
வண்ண கொடிகள்....
நாகூர் ஆண்டகை....
நாளும் நினைவில்....
தேனூறும் நாவுகள்....
திக்ரில்....
இறையோடு......!

எங்களின் சுவாசம்....
ஏந்தல் நபிகளார்(ஸல்)....
வழித்தோன்றல்....
அஸ்கல் வலியுள்ளாஹ்வின்....
அன்புப் பேரன்....
முஹம்மதுத் தம்பி லெவ்வை....
போடியாரின்....
கனவோடு....
சாஹுல் ஹமீது நாயகத்தின்....
தரிசனம்....
அல்லாஹ்வின் ஆணையில்....
அனைத்துமே....
ஆனது  இங்கே......!

தானும் தருவான்....
தருவாரையும் கொண்டு....
தருவான்....
எண்ணங்களைப் போலவே....
இறைவனின் நாட்டங்கள்....
நன்மைகளை விதைத்தால்....
நல்லதாகவே....
நாட்களைக் காணலாம்....
தீமைகளாயின்....
அவரவர் வாழ்வே....
தீய்வது நிச்சயம்......!

சாத்தான்கள் ஓதும்....
வேதங்களுக்கு....
சாத்துவோம் கதவுகளை....
பீத்தல் மனங்கள்....
பிசாசுகளின் குடியிருப்பு....
பணத்தை எறிந்தால்....
பல்லிளிக்கும் கூட்டம்....
பிணங்களுக்குச் சமம்....
புனிதத்தை விளங்கிடும்....
நல்ல பூக்களோடு....
சேருவோம்......!

அல்லாஹ்வை.... றஸூலை....
அவனது ஆத்மீக....
நேசர்களை....
நெஞ்சினில் சுமப்போம்....
நேரிய ஒளியில்....
மிதப்போம்....
செஞ்சொல் அறியாத....
சேற்றுப் புழுக்கள்....
இறை நஞ்சில் விழுந்து....
நாசமாகும் ஓர்நாள்......!

நமது பாதைகள்....
தெளிவு....
நம்மைக் காக்கும்....
நாயனின் ஆசிகள்....
சொரியும்....
நம்புவோம்......
பிரார்த்திப்போமாக......!
அல்ஹம்துலில்லாஹ்......!!

---- Kalmunai Julfika Sheriff ----
                13/02/2019.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts