கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-01-30 07:56:15

தேசிய சமாதானப்பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வமத மாநாடு கொழும்பில்

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
தேசிய சமாதானப்பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய சர்வமத மாநாடு (28) கொழும்பில் நடை பெற்றது.
பண்டாரநாயக சர்வதேச மாநட்டு மண்டபத்தில்.பேரவையின் சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் எனும் தொனிப்பொருளில் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தலைமையில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் தேசிய நல்லிணக்க அரச கரும மொழிகள் சமூக முன்னேற்ற இந்து மத அலுவல்கள் அமைச்சர் ம்னோ கனேசன் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைனா டெப்லிட்ஸ் சர்வோதயத்தின் தலைவர் கலாநிதி ஏ.ரீ.ஆரியரத்ன தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜோ.வில்லியம் காணாமல் போருக்கான அலுவலகத்தின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி நிமல்கா பெர்ணாண்டோ பேரவையின் திட்ட முகாமையாளர் வெனோரி டி சில்வா உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வமதத்தலைவர்கள் மற்றும் சர்வ்மத அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் .நிகழ்வின் இறுதியில் சமாதானத்தைப்பிரதிபலிக்கும் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts