தொழிநுட்பம் | சமூக வாழ்வு | 2019-01-13 16:49:17

இணையத்தில் திரைப்படம் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை: ரூ.10 இல. அபராதம் - இந்திய அரசு அறிவிப்பு

புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 இலட்சம் அபராதம் வசூலிக்கும் புதிய சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இணையதளங்களில் புதுப் படங்கள் வெளியாவது மட்டும் நின்றபாடில்லை. தொடர்ந்து புதிய படங்கள் வெளியான முதல் நாளே இணையதளங்களிலும் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. பட அதிபர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இதைத் தடுக்க திரைப்பட 1952 சட்டத்தின் 7-வது பிரிவு அபராதம் விதிக்க வகை செய்கிறது.

இந்நிலையில் தண்டனையை கடுமையாக்குவதற்காக இச்சட்டத்தில் புதிய உட்பிரிவை சேர்க்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சு திரைப்பட சட்ட திருத்தத்தை உருவாக்கி உள்ளது.

இதன்படி எழுத்து மூலமான அனுமதியின்றி திரைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது ரூ.10 இலட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

இந்த வரைவு குறித்து 14-ந் திகதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts